திருப்பதி கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!
Published on

திருப்பதி,

2003ம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர், சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த நடிகை ஸ்ரேயாவுடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com