சமூகவலைத்தளத்தில் தனது ஆபாச படத்தை நீக்கக்கோரி நடிகை சுருதி ஹாசன் வழக்கு

வணிக பயன்பாடு, விளம்பரங்களுக்காக தனது பெயர், படம் மற்றும் குரல் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறது.

சமூகவலைத்தளத்தில் தனது ஆபாச படத்தை நீக்கக்கோரி நடிகை சுருதி ஹாசன் வழக்கு
Published on

மும்பை,

கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதி ஹாசன் மும்பையில் வசித்து வருகிறார். அவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பரப்பப்படுகிறது.

ரூ.15 கோடி இழப்பீடு

தன்னை ஆபாசமாக சித்தரித்து பரப்பப்படுவதற்கு தடை விதிப்பதோடு, சமூகவலைத்தளத்தில் உள்ள ஆபாச படங்களை நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் வணிக பயன்பாடு, விளம்பரங்களுக்காக தனது பெயர், படம் மற்றும் குரல் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறது. தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com