'கூலி' படத்தில் சுருதி ஹாசனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் நடிகை சுருதி ஹாசனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
'கூலி' படத்தில் சுருதி ஹாசனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, படத்தின் வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் விரைவில் துவங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, முன்னதாக, கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிரின் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்து இருந்தது.

இந்நிலையில், கூலி படத்தில் நடிக்கும் சுருதி ஹாசனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் பிரீத்தி பாத்திரத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறார்

X

Daily Thanthi
www.dailythanthi.com