“ரெட் லேபிள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகை சிம்ரன்


“ரெட் லேபிள்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகை சிம்ரன்
x
தினத்தந்தி 31 Oct 2025 2:38 PM IST (Updated: 31 Oct 2025 2:40 PM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் லெனின், அஸ்மின் நடித்துள்ள ‘ரெட் லேபிள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் ‘ரெட் லேபிள்’. கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த் நடித்துள்ளனர்.

கோவை பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ரெட் லேபிள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார். பொதுவாக சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் அல்ல. ஆனால் புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் முதல் முறையாக சிம்ரன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Related Tags :
Next Story