அண்ணாமலையார் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சென்னை,
கடந்த 2000ம் ஆண்டு வெளியான 'என்னவளே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன்பின்னர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து தென் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.
தமிழ் சினிமாவில் கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு 'புன்னகை அரசி' என ரசிகர்கள் சினேகாவை கொண்டாடினர். இவர் கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story






