கோவா கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை...வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் கோவா கடற்கரையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
சென்னை,
நடிகர் நானி தயாரிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ''கோர்ட்'' படம் மகத்தான வெற்றி பெற்றது. இதில், பிரியதர்ஷி புலிகொண்டா, ஸ்ரீதேவி அப்பல்லா, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இதில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் கோவா கடற்கரையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






