நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு கவுதமி, திரிஷா உள்ளிட்ட நடிகைகள் இரங்கல்

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. #ActressSridevi
நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு கவுதமி, திரிஷா உள்ளிட்ட நடிகைகள் இரங்கல்
Published on

சென்னை,

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதேபோன்று அவரது மறைவுக்கு திரைப்பட நடிகைகள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகை என்று தனது இரங்கல் செய்தியில் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது. அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். ஆன்மா அமைதி அடையட்டும் என நடிகை திரிஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டது. இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என நடிகை பிரீத்தி ஜிந்தா டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம் என நடிகை பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை என நடிகை சுஷ்மிதா சென் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேஹா தூபியா, நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com