கேரளாவுக்கு அரிசி, பருப்பு அனுப்பிய நடிகை சன்னிலியோன்

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிகின்றன. நடிகர், நடிகைகள் முதல்–மந்திரி நிவாரண நிதிக்கு காசோலைகள் அனுப்பி வருகிறார்கள்.
கேரளாவுக்கு அரிசி, பருப்பு அனுப்பிய நடிகை சன்னிலியோன்
Published on

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், லாரன்ஸ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி வழங்கி உள்ளனர்.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கி உள்ளார். தெலுங்கு நடிகர்களும் நிதி அனுப்பி உள்ளனர். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நிதியுடன் தனது பயன்பாட்டுக்கு வாங்கி வைத்திருந்த உடைகள், ஷூக்கள் போன்றவற்றையும் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் ஆபாச பட நடிகையான சன்னிலியோனும் உதவி பொருட்களை அனுப்பி உள்ளார். 1,100 கிலோ அரிசி, பருப்பு போன்றவற்றை லாரியில் அனுப்பி வைத்து இருக்கிறார். நான் அனுப்பிய உதவிகள் மிகவும் குறைவானது என்று எனக்கு தெரியும். அதிகம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

சன்னிலியோன் வடகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இப்போது தமிழில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com