சிறு வயதில் பிரிந்து போன தந்தையை சந்திக்க விரும்பாத நடிகை தபு

சிறு வயதில் பிரிந்து போன தந்தையை சந்திக்க விரும்பியது இல்லை என நடிகை தபு தனது சொந்த வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிறு வயதில் பிரிந்து போன தந்தையை சந்திக்க விரும்பாத நடிகை தபு
Published on

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு, தெலுங்கு, இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். தபு குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயும்-தந்தையும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தனது சொந்த வாழ்க்கை குறித்து தபு அளித்துள்ள பேட்டியில், "பள்ளியில் படித்தபோது பாத்திமா என்பதுதான் எனது குடும்ப பெயர். என் தந்தையின் குடும்ப பெயரை உபயோகிப்பது முக்கியம் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் எடுத்துக்கொண்டது தபு என்கிற எனது சினிமா பெயரைத்தான். எனக்கு என் தந்தை சம்பந்தப்பட்ட நினைவுகள் எதுவும் இல்லை. அவர் எங்களை நான் சிறுமியாக இருந்த போதே பிரிந்து சென்று விட்டார். என் சகோதரி பரா நாஜ் மட்டும் அடிக்கடி சென்று அவரை சந்திப்பார். ஆனால் நான் எப்போதும் அவரை சந்திக்க விரும்பியது இல்லை. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கூட எனக்கு இல்லை. நான் எனது வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆகி இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com