கொரோனா தொற்றில் இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்.
கொரோனா தொற்றில் இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்
Published on

ஐதராபாத்,

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள கான்டினன்டல் ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிப்பு குறைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டார்.

இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில், கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

நான் நோயுற்று, மிகவும் சோர்வடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். உரிய சிகிச்சையால் நான் தற்போது நலமாக உள்ளேன். கனிவான சேவை, அக்கறை என்னை குணமடைய வைத்தது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com