'கருப்பு' படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை திரிஷா

நடிகை திரிஷா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த பிடிஎஸ் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'கருப்பு' படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை திரிஷா
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களா சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த 'கருப்பு' திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், பல தடைகளை கடந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கருப்பு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை திரிஷா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த பிடிஎஸ் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com