'ஸ்பிரிட்' படத்தில் இணைந்த நடிகை திரிப்தி டிம்ரி


ஸ்பிரிட் படத்தில் இணைந்த நடிகை திரிப்தி டிம்ரி
x

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை திரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

கல்கி 2898 ஏடி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2', 'தி ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் 'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தநிலையில், சம்பளம் காரணமாக 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோனே விலகி உள்ளார்.

இந்நிலையில், தீபிகா படுகோனேக்கு பதிலாக வேறொரு நடிகையை படக்குழு தேர்வு செய்துள்ளது. அதன்படி, நடிகை திரிப்தி டிம்ரி ஸ்பிரிட் படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story