துன்புறுத்தியதாக புகார் ரம்யா கிருஷ்ணனுடன் நடிகை வனிதா மோதல்?

துன்புறுத்தியதாக புகார் ரம்யா கிருஷ்ணனுடன் நடிகை வனிதா மோதல்?.
துன்புறுத்தியதாக புகார் ரம்யா கிருஷ்ணனுடன் நடிகை வனிதா மோதல்?
Published on

நடிகை வனிதா 3-வது திருமண சர்ச்சையில் சிக்கி மீண்டு டி.வி.யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். தற்போது அந்த நிகழ்ச்சியில் தன்னை அவமதித்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி வெளியேறி இருக்கிறார். இதுகுறித்து வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். அதிகார துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களை நான் ஏற்பது இல்லை. ஆனால் பணி செய்த இடத்தில் எனது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத நபரால் துன்புறுத்தப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன். நியாயமற்ற முறையிலும் நடத்தப்பட்டேன். வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்தவில்லை. பெண்களும் அதுபோல் நடந்து பொறாமைப்படுவதும், வாய்ப்புகளை அழிக்க முயற்சிப்பதும் மோசமான செயல். வயதில் மூத்தவர் முன்னேற கஷ்டப்படுபவர்களை இழிவாக பார்ப்பதும், அவமானப்படுத்துவதும் நடக்கிறது. கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்க துடிக்கும் என்னையும் துன்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணனைத்தான் வனிதா மறைமுகமாக சாடி இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா நடிப்பு சிறப்பாக இல்லை என்று நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணன் பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே அளித்ததாகவும், இதனால்தான் வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து ரம்யாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கருத்து சொல்லவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com