நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று
Published on

சென்னை,

'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், 'விக்ரம் வேதா', 'மாரி-2', 'கன்னிராசி', 'பாம்பன்', ' நீயா-2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மிஸ்டர் சந்திரமௌலி', ' சண்டக்கோழி-2', 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக ஒரு வீடியோ பதிவின் மூலம் அவர் அறிவித்துள்ளார். அதில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரையும் முககவசம் அணியும்படி நடிகர்கள் வலியுறுத்த வேண்டும் ஏனென்றால் நடிகர்கள் ஆகிய நாம் படப்பிடிப்பின் போது முககவசம் அணிய முடியாது. சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள், முக கவசம் அணியுங்கள்" என்று வரலட்சுமி சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com