கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை அறிவுரை

கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை வர்ஷா பொல்லம்மா அறிவுரை கூறியுள்ளார்.
கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை அறிவுரை
Published on

விஜய்சேதுபதியின் 96 படத்தில் நடித்து பிரபலமானவர் வர்ஷா பொல்லம்மா. விஜய்யின் பிகில் படத்திலும் நடித்து இருந்தார். சதுரன், வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். வர்ஷா பொல்லம்மா கார் ஓட்டுபவர்களுக்கு அறிவுரை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோவில், ''அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மழை நேரத்தில் நீங்கள் கார் ஓட்டும்போது சுற்றி இருப்பவர்களை பற்றி யோசியுங்கள். நீங்கள் சவுகரியமாக இருந்து காரை ஓட்டுகிறீர்கள். ஆனால் உங்கள் பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், ஆட்டோக்களில் செல்பவர்களுக்கு சவுகரியமாக இருக்காது. நீங்கள் வேகமாக காரை ஓட்டும்போது சாலையில் கிடக்கும் தண்ணீர் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது தெளிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்கள் சங்கடப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு மழை நேரத்தில் காரை மெதுவாக ஓட்டி செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com