எதிர்கால ஆசைகளை ஏஐ வீடியோவாக வெளியிட்ட “டிசி” பட நடிகை

லோகேஷ் கனகராஜுடன் வாமிகா கபி நடித்த ‘டிசி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமானது.
எதிர்கால ஆசைகளை ஏஐ வீடியோவாக வெளியிட்ட  “டிசி” பட நடிகை
Published on: 

நடிகை வாமிகா கபி, தனது எதிர்கால ஆசைகள் மற்றும் திட்டங்களை, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை வாமிகா கபி. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த ‘டிசி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமானது. வணிக ரீதியாக ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாகவும் உள்ளது.

வசூல் வெற்றியைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் நடிகை வாமிகா கபிக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது. டிசியில் சந்திரா என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாக வாமிகாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வரவேற்பால் நடிகை வாமிகா கபியும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

இவர் கீர்த்தி சுரேஷ், வருண் தவானுடன் ‘பேபி ஜான்’ படத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால ஆசையை வீடியோவாக வெளியிட்ட வாமிகா கபி

சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய வாமிகா கபி,, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எதிர்கால ஆசை ஏஐ வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில், பிளான் ஏ (Plan A) முதல் பிளான் எம் (Plan M) வரை உள்ள ஆசைகளை ஒவ்வொன்றாக ஏஐ புகைப்படங்களாக்கி அதனை வீடியோவாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இதில் பிளான் ஏ (குடும்பத்துடன் வாழ்வது) தோல்வியடைந்தாலும் 25 பிளான்களை வைத்திருக்கிறேன் என பூனைகள் மற்றும் நாய்களுடன் மட்டும் இருப்பது, உலகம் சுற்றுவது, முழுநேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது, சாமியார் ஆவது என ஒவ்வொன்றும் பிறரை ரசிக்க வைத்திருப்பதால் இந்த வீடியோவுக்கு பல பிரபலங்களும் சிரிப்பு எமோஜியைப் பதிவிட்டுள்ளனர். நடிகை வாமிகா கபி இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோவுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com