கவர்ச்சி படங்களை வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க கட்டணம் வசூலிக்கும் நடிகை

நடிகை கிரணுக்கு தற்போது படவாய்ப்புகள் வராததால் தனது பெயரில் ஒரு செயலியை (ஆப்) உருவாக்கி அந்த செயலியில், தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைத்து கட்டணம் வசூலித்து வருகிறார்.
கவர்ச்சி படங்களை வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க கட்டணம் வசூலிக்கும் நடிகை
Published on

'ஜெமினி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கிரண், தனது கொஞ்சல் பேச்சு மற்றும் வசீகரிக்கும் அழகால் ரசிகர்களை ஈர்த்தார். 'வில்லன்', 'அன்பே சிவம்', 'வின்னர்', 'தென்னவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிரண், தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்களில் நடித்தார். சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார்.

'ஆம்பள', 'முத்தின கத்திரிக்கா', 'சகுனி' போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாகவும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வந்த கிரண், தற்போது படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் படு கவர்ச்சியான படங்கள் பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தன. '40 வயதிலும் இப்படி கவர்ச்சியில் கலக்குகிறாரே...', என பலரும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனாலும் அவருக்கு படவாய்ப்புகள் வரவே இல்லை. இதனால் சற்றும் யோசிக்காமல் தனது பெயரில் ஒரு செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளார். அந்த செயலியில், தன்னுடன் ஆடியோவில் பேச, வீடியோ காலில் பேச, தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க என பல்வேறு சேவைகளுக்கு தனித்தனியாக கட்டண விவரமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த செயலியை பயன்படுத்தவே வாடிக்கையாளர்கள் ரூ.49 கட்டணம் கட்டவேண்டும் என்பதுதான் தலையாய விதிமுறை.

கிரணின் இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் இணைந்து வருகிறார்கள். அதே சமயம் இதுபோன்ற செயலிகளை தடைசெய்யவேண்டும் என்றும் சிலர் கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com