

தமிழில் ஓவியாவுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தேவிகா நம்பியார். மலையாளத்தில் தங்க பஸ்மா குறியிட்ட தம்புராட்டி, ஒன் போன்ற படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருக்கிறார். இவருக்கும், மலையாள இசையமைப்பாளரும், பாடகருமான விஜய் மாதவுக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.