சுயசரிதை எழுதும் நடிகை

இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அலியாபட் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
சுயசரிதை எழுதும் நடிகை
Published on

 "சிறு வயது முதல் இப்போது வரை எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நான் மறந்ததே இல்லை. எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் உடனே எனது செல்போனை எடுத்துக்கொண்டு அதில் என் சிறு வயது முதல் இப்போது வரை நடந்த சம்பவங்கள் பற்றிய படங்களை பார்ப்பேன்.

சினிமாவில் நேரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். அலியா செட்டுக்கு தாமதமாக வந்தார் என்று யாருமே சொல்ல முடியாது. என்னோடு பணியாற்றிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாருமே இதை சொல்வார்கள். நான் சினிமாவிற்கு வந்த பிறகு கற்றுக்கொண்ட பாடம் இதுதான்.

படப்பிடிப்பிற்கு தாமதமாக சென்றால் என்னால் படப்பிடிப்பு தாமதமாகி தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் வரும் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் அந்த தவறுகளை எப்போதும் செய்ததில்லை. செய்ய மாட்டேன். எனக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. எனவே என் சுயசரிதையை நானே எழுதுவேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com