நாட்களை சுலபமாக கடக்க முடியவில்லை நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்

நாட்களை சுலபமாக கடக்க முடியவில்லை நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்.
நாட்களை சுலபமாக கடக்க முடியவில்லை நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்
Published on

கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த ஜூலை மாதம் நடிகை யாஷிகா ஆன்ந்த் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி அவரது தோழி வள்ளிச்செட்டி பவனி பலியானார். யாஷிகாவுக்கு இடுப்பு கால் எலும்புகள் முறிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் படுக்கையில் ஓய்வு எடுத்து வருகிறார். யாஷிகா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தோழி பற்றிய நினைவுகளை யாஷிகா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், உன்னை நினைக்காமல் ஒரு நாளை கூட என்னால் சுலபமாக கடந்து செல்ல முடியவில்லை. மீண்டும் காலத்தில் பின்னோக்கி சென்று அனைத்தையும் மாற்ற விரும்புகிறேன். என்னை விட்டு செல்லும் முன்பு நீ கொடுத்துவிட்டு சென்ற அனைத்து நினைவுகளுக்காகவும் நன்றி சொல்கிறேன். நீ இப்போது ஒரு தேவதையாக எல்லாவற்றையும் பார்க்கிறாய். நீ ஒரு ரத்தினம். உன்னை நான் உடைத்துவிட்டேன். நீ இங்கு இல்லை என்பதை மனது ஏற்க மறுக்கிறது. நீ நல்ல இடத்தில் இருக்க பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் நானும் உன்னை பார்க்க வருவேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com