ரசிகரின் செயலால் நடிகை யாஷிகா ஆனந்த் கவலை

ரசிகர் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தின் தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.
ரசிகரின் செயலால் நடிகை யாஷிகா ஆனந்த் கவலை
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி' ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவரின் செயலால் நடிகை யாஷிகா ஆனந்த கவலையடைந்துள்ளார். அதாவது, ரசிகர் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை அந்த நபர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த நடிகை யாஷிகா ஆனந்த், "இப்படி பச்சை குத்தும்போதும் எவ்வளவு வலிச்சிருக்கும். ஏன் இப்படி பண்றீங்க. உங்க அம்மாவ சந்தோஷப்படுத்துங்க. அதான் எனக்கும் சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com