கவர்ச்சி படம் வெளியிட்ட நடிகை யாஷிகாவை விளாசிய ரசிகர்கள்

நடிகை யாஷிகா டுவிட்டரில் வெளியிட்ட கவர்ச்சி படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
கவர்ச்சி படம் வெளியிட்ட நடிகை யாஷிகாவை விளாசிய ரசிகர்கள்
Published on

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக வந்து மேலும் பிரபலமானார். டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தோன்றினார். தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்திலும் உறுதிப்படுத்தி இருந்தார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

யாஷிகா அடிக்கடி டுவிட்டரில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது புதிதாக படு கவர்ச்சியான தனது படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. படத்தின் கீழே யாஷிகாவை கேவலமாக பேசியும், விமர்சித்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் பொள்ளாச்சி சம்பவத்தை குறிப்பிட்டு யாஷிகாவை கண்டித்துள்ளார். இன்னும் சிலர் அவரது கவர்ச்சி தோற்றம் அழகாக இருப்பதாக பேசி உள்ளனர்.

இந்தி நடிகைகள் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வழக்கத்தை இப்போது தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com