நடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை: தொழில் அதிபர் கைது

நடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
நடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை: தொழில் அதிபர் கைது
Published on

ந்தி பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீனத் அமன். தம்மர தம் என்ற பாடலில் ஆடிப்பாடி அந்த காலத்து இளைஞர்களை கிறங்கடித்து இருந்தார். தற்போது அவருக்கு 68 வயது ஆகிறது. சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜீனத் அமன் மும்பையில் உள்ள ஜுகு போலீஸ் நிலையத்துக்கு சென்று தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.

வீட்டில் தனியாக இருந்தபோது அந்த நபர் திடீரென்று புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் ஜீனத் அமனை பாலியல் பலாத்காரம் செய்தவரின் பெயர் சர்பராஷ் என்ற அமன் கன்னா என்பது தெரியவந்தது. இவர் தொழில் அதிபராக இருக்கிறார்.

தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜீனத் அமனும் தொழில் அதிபரும் ஏற்கனவே ஒன்றாக தொழில் செய்தவர்கள் என்றும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என்றும் மும்பை பட உலகில் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com