

1996ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான 'துஷ்மன் துனியா கா' படம் மூலம் அறிமுகமான நடிகை லைலா, திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள லைலா தற்போதும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சூர்யாவுடன் அவர் நடித்த 2002ஆம் ஆண்டு வெளியான 'மவுனம் பேசியதே' மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகை லைலா தனது சினிமா கேரியர் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு;
“நான் சாதனைகளை கணக்கில் வைத்துக் கொள்வது கிடையாது. நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதே என் ஒரே இலக்கு. இதுவரை என் பயணம் மிகவும் அருமையாக இருந்துள்ளது. ஒவ்வொரு படமும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பெண்கள் நடிகைகளுக்கு ஆண் நடிகர்களைப் போல நல்ல வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் மேம்பட்டு வருகிறது. தற்போது பெண்களை மையமாகக் கொண்ட ஒரு வெப் சீரிஸில் நடிக்க விரும்புகிறேன்,” என்று லைலா கூறினார்.
'மவுனம் பேசியதே' படம் புதியதாக ரிலீஸ் செய்யப்பட்டது போலவே இருந்தது. இளம் தலைமுறை அதை நல்ல முறையில் ஏற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த படத்தை பார்க்கும்போது அது பழைய படம் போல எனக்கே தோன்றவில்லை. படத்தின் பின்னணி இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. இயக்குனர் அமீர் மிகவும் எதிர்கால சிந்தனையுடன் அந்த படத்தை உருவாக்கியிருந்தார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.