நடிகர்களை விட நடிகைகளுக்கு சவால்கள் அதிகம் - காஜல் அகர்வால்

நம்மை நிலைநிறுத்திக் கொள்ள மிகவும் போராட வேண்டும் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால்
கோப்புப்படம்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை குறைத்தார். தற்போது மீண்டும் படங்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சாகர் பி.ஷிண்டே தயாரிப்பில் டி.கே.சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' படத்தில் முன்னணி நடிகரான ஸ்ரேயாஸ் தல்படே உடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படம் வருகிற ஜூலை 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக காஜல் அகர்வால் கூறும்போது, "நடிகர்களை விட நடிகைகளுக்கு சவால்கள் அதிகம். இங்கு நம்மை நிலைநிறுத்திக் கொள்ள மிகவும் போராட வேண்டும். எனவே முழு திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதை கவருவேன்". என்றார்.

"பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் படைப்பு இது" என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com