ஆபாச புகைப்படங்கள்: 8 வருடமாக பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் நடிகை கோபம்

ஆபாச புகைப்படங்களால் 8 வருடமாக தான் பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக நடிகை நிகிதா தெரிவித்துள்ளார்.
ஆபாச புகைப்படங்கள்: 8 வருடமாக பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் நடிகை கோபம்
Published on

மும்பை

2015-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்டு பிகினியில் வெற்றி பெற்றவர் நிகிதா கோகலே.மராட்டிய மாநிலம் நாக்பூரில் தும்சார் எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.நிகிதாவின் இயற்பெயர் துர்கா கோகலே.மாடலிங் துறையில் வெற்றி பெற்ற நிகிதா மராத்தியில் காலேஜ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகும் கவர்ச்சியும் நிறைந்த புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

நிகிதா கோகலே இன்ஸ்டாகிராம் பதிவில், தான் 8 வருடமாக பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கபட்டு உள்ளது. எனது நிர்வாண புகைப்படங்கள்தான் அதற்கு காரணம் என சொல்லப்பட்டுள்ளது.

உணவு சாப்பிடுதல் உள்ளிட்ட அறிவற்ற புகைப்படங்களை பதிவிடலாம் ஆனால் கலைநயமிக்க போட்டோக்களை பதிவிடக்கூடாதா? எனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் எனது போட்டோக்களை இனி பதிவிடுவேன் எனக் கூறி வலைப்பக்கத்தின் முகவரியையும் இணைத்துள்ளார் நிகிதா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com