இதுவரை ஜோடியாக நடித்தவர்களில் அதர்வாவை கவர்ந்த கதாநாயகி

டைரக்டர் கண்ணன் தயாரித்து இயக்கிய ‘தள்ளிப்போகாதே’ படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்து இருக்கிறார்.
இதுவரை ஜோடியாக நடித்தவர்களில் அதர்வாவை கவர்ந்த கதாநாயகி
Published on

டைரக்டர் கண்ணன் தயாரித்து இயக்கிய தள்ளிப்போகாதே படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்து இருக்கிறார். கதாநாயகி அனுபமா. படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு டைரக்டர் கண்ணன் பேசியதாவது:-

இது விண்ணைத்தாண்டி வருவாயா, 96 போன்ற படங்களைப்போல் அழகான காதல் கதை. அதர்வாவும், அனுபமாவும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். அதர்வாவுக்கு ஈட்டி அவருடைய அப்பா நடித்த இதயம் மாதிரி வெற்றியை கொடுக்கும்.

கபிலன் வைரமுத்து மிக சிறப்பாக பாடல்களையும், வசனங்களையும் எழுதியிருக்கிறார். படத்தில் வில்லன் கிடையாது. சூழ்நிலைகளே வில்லன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதர்வா பேசும்போது, எனக்கு வரலாற்று படங்களிலும், புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கதைகளிலும் நடிக்க ஆசை என்றார். அவரிடம், உங்களுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளில், மிக மென்மையானவர் யார்? என்று கேட்கப்பட்டது.

அதர்வா சற்றும் யோசிக்காமல், அனுபமா என்று பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com