"அட்ரஸ்" படத்தின் "மேகம் மூடிக்கொள்ளும்" பாடல் வெளியீடு


ராஜா மோகன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘அட்ரஸ்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இயக்குநர் ராஜா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அட்ரஸ்' எனும் திரைப்படத்தில் அதர்வா, இசக்கி பரத், தம்பி ராமையா, பூஜா ஜாவேரி , தியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணகுமார் வெங்கடசாமி மற்றும் ஸ்ரீநிவாஸ் தயாநிதி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை காக்டெய்ல் சினிமாஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற 'மேகம் மூடிக் கொள்ளும் வானம் தேடிச் செல்லும்..' எனத் தொடங்கும் பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுத பின்னணி பாடகர் செந்தில் கணேஷ் - பாடகி சிந்தூரி விஷால் மற்றும் இசையமைப்பாளரும், பாடகருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இயற்கையின் பேரழகையும், மலைவாழ் மக்களின் நாளாந்த வாழ்வியலையும் ரசிக்கும் வகையில் விவரிக்கும் இந்தப் பாடலும், பாடலுக்கான வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

1 More update

Next Story