ஓம் என் அறைக்கு வா...! சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளான ஆதிபுருஷ் டைரக்டர் மீது கோபத்தில் பிரபாஸ்

ஆதிபுருஷ் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்படடுகிறது. இதற்கிடையில் பிரபாஸ் கோபப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஓம் என் அறைக்கு வா...! சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளான ஆதிபுருஷ் டைரக்டர் மீது கோபத்தில் பிரபாஸ்
Published on

சென்னை

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆதிபுருஷ் டீசர் சமூக வலைதளங்களில் மிகுந்த கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.

இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகுபலி படத்தை கொடுத்த பிரபாஸ் இப்படி ஒரு தரமற்ற படத்தை எடுத்திருக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

ராவணனை முற்றிலுமாக மாற்றி, சைப் அலிகானின் ராவணன் கேரக்டரை கில்ஜியாகக் காட்டி, க்ஷத்திரிய ராமனை பிராமணனாக்கி, ஆஞ்சநேயரின் மீசையை பிய்த்து மதம் மாற்றியிருக்கிறார்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டாலும் படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் இதற்கிடையில் பிரபாஸ் கோபப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோபத்தில் இயக்குனர் ஓம் ரவுத்தை அவர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வின் வீடியோவில் டீசர் வெளியானதும், கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்த்த பிரபாஸ் இயக்குனரிடம் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

பிரபாஸ் கோபமாக ஓம் என் அறைக்கு வா என்று கூறுகிறார். பிரபாஸின் முகத்தில் கோபம் தெரிகிறது. அதனால் பிரபாஸை இவ்வளவு கோபமாக பார்த்ததில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராமர் பிறந்த அயோத்தியில் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரை ஆதிபுருஷே ரசிக்கவில்லை என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால், கோடிக்கணக்கில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். ஏற்கனவே 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், படத்தின் விஎப்எக்ஸ் மிகவும் மோசமாக இருப்பதால் நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். படத்தின் தரத்தை உயர்த்துங்கள் என கூறி வருகின்றனர்.

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமனாகவும், பாலிவுட் நடிகை கிருத்தி சனூன் சீதையாகவும் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சைப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதிபுருஷ் அடுத்த ஆண்டு 2023ல் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com