ஏப்ரல் 1-ல் காதலை சொன்ன கணவர்… ’முதலில் ஜோக் என்று நினைத்தேன்’ - நினைவுகூர்ந்த நடிகை அதிதி

தொலைக்காட்சி உலகில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.
ஏப்ரல் 1-ல் காதலை சொன்ன கணவர்… ’முதலில் ஜோக் என்று நினைத்தேன்’ - நினைவுகூர்ந்த நடிகை அதிதி
Published on

சென்னை,

தொலைக்காட்சி நடிகை அதிதி மாலிக், தனது கணவர் மோகித் மாலிக் உடனான காதல் நினைவுகளை பகிர்ந்து தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 1-ம் தேதி ஏற்பட்ட ஒரு சுவாரசியமான தருணமே தங்கள் காதல் கதையின் தொடக்கம் என அவர் தெரிவித்துள்ளார். அதில், அன்றைய தினம் மோகித், “நாம் திருமணம் செய்து கொள்வோம்” என்று நேரடியாக கூறியதை முதலில் ஜோக் (April Fool) என நினைத்ததாக அதிதி குறிப்பிட்டார். ஆனால் அது பின்னர் நீண்டகால மகிழ்ச்சியான வாழ்க்கைப் பயணமாக மாறியது என தெரிவித்தார்.

Also Read
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை ராமர்” - ரன்பீர் கபூர்
ஏப்ரல் 1-ல் காதலை சொன்ன கணவர்… ’முதலில் ஜோக் என்று நினைத்தேன்’ - நினைவுகூர்ந்த நடிகை அதிதி

தொலைக்காட்சி உலகில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். பல ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து, 2021-ல் இவர்களுக்கு ‘எக்பிர்’ என்ற மகன் பிறந்தார்.

மோகித் மாலிக், ‘குல்பி குமார் பாஜேவாலா’, ’லாக்டவுன் கி லவ் ஸ்டோரி’, ’டோலி அர்மானோன் கி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அதேபோல் அதிதி, ’மாலிக் ஷராரத்’, ’பனூ மேன் தேரி துல்ஹன்’ போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com