''நான் இன்னும் காத்திருக்கிறேன்''...மனம் திறந்த அதிதி ராவ்


Aditi Rao Hydari opens up about career gaps after Heeramandi success
x

தான் இன்னும் புதிய படத்தில் கையெழுத்திடவில்லை என்று அதிதி தெரிவித்திருக்கிறார்.

மும்பை,

'ஹீரமண்டி' படத்தில் நடித்ததற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்ற போதிலும், அதிதி ராவ் இன்னும் புதிய படத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறி இருக்கிறார்.

பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய வெப் தொடர் "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்". இதில், சோனாக்சி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதிதி ராவ் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட சீரிஸாக உருவான இது நல்ல வரவேற்பை பெற்றது.

இதில், நடிப்பிற்காக நடிகை அதிதி ராவுக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில், பாராட்டுகள் கிடைத்தபோதிலும், தான் இன்னும் ஒரு புதிய படத்திலோ அல்லது நிகழ்ச்சியிலோ கையெழுத்திடவில்லை என்று அதிதி தெரிவித்திருக்கிறார்.

பேட்டி ஒன்றில் 'ஹீரமண்டி' வெப் தொடருக்கு பின் ஏற்பட்ட இடைவெளி குறித்து அதிதி மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில், "ஹீரமண்டியில் நடித்ததற்காக எனக்கு பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும், அதன் பிறகு எதேனும் நிகழ்ச்சியிலோ அல்லது படத்திலோ நான் கையெழுத்திட்டிருக்கிறேனா? என்றால் இல்லை. நான் இன்னும் காத்திருக்கிறேன்" என்றார்.

1 More update

Next Story