தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது எப்படி? - அதிதி ஷங்கர் ஓபன் டாக்


Aditi Shankar: ‘Bhairavam’ is an apt debut for me in Telugu
x

’பைரவம்’ என்ற படத்தின் மூலம் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் தற்போது பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஜோடியாக 'பைரவம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். விஜய் கனகமெடலா இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் புரமோசனுக்காக அதிதி ஷங்கர் ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு பேசிய அதிதி, தனக்கு இந்த பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில்,

"எனது முதல் தமிழ் படத்தை பார்த்த இயக்குனர் விஜய், 'பைரவம்' படத்திற்கு நான் சரியாக இருப்பேன் என்று உணர்ந்து இந்த வாய்ப்பு கொடுத்தார்.

தெலுங்கில் நடிப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் இப்படத்தில் நடிக்கும்போது எனக்கு அப்படி தோன்றவில்லை. எனது சிறுவயதில் தந்தையுடன் ராமோஜி பிலிம் சிட்டிக்கு வந்திருக்கிறேன்.

ஆனால், அங்கு என் படத்தின் படப்பிடிப்புக்கு வருவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இது நீண்ட கால கனவு நனவானதுபோல் உள்ளது' என்றார்.

1 More update

Next Story