அதிதி ஷங்கரின் 'பைரவம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘பைரவம்’ படத்தின் ‘ஓ வெண்ணிலா’ என்ற முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
Published on

கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர். இவர் இயக்குனர் ஷங்கரின் மகளாவார் .அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது இவர், விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா' படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாகவும் அர்ஜுன் தாஸுடன் 'ஒன்ஸ்மோர்' படத்திலும் நடித்து வருகிறார்.

அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. விஜய் கனகமெடலா இயக்கும் இப்படத்திற்கு 'பைரவம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கு மொழி சரளமாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

'பைரவம்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 'ஓ வெண்ணிலா' என்ற முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஸ்ரீ சரண் பாகலா இசையமைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com