அதிதி சங்கர் - நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் இசை ஆல்பம்

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள ‘இருவர்’ பாடலை, அவரோடு இணைந்து சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி சங்கர் பாடியுள்ளனர்.
அதிதி சங்கர் - நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் இசை ஆல்பம்
Published on: 

அதிதி சங்கர் - நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள “இருவர்” இசை ஆல்பம் நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

அதிதி சங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்துள்ள புதிய இசை ஆல்பம் திட்டத்திற்கு ‘இருவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கதைக்களம்

இருவர் ஒரு பயணம் என்ற வாசகத்துடன் ஒரு அழகான காதல் இசைப் பயணமாக இது உருவாகியுள்ளது.இந்த ஆல்பத்தை 'ஜடா' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த பாடலை, அவரோடு இணைந்து சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி சங்கர் ஆகிய இருவர் பாடியுள்ளனர்.

இந்நிலையில், ‘இருவர்’ பாடலின் ஆடியோ மற்றும் லிரிக் வீடியோ வரும் நவம்பர் 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X