சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்..!
Published on

சென்னை,

'டான்' திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் கதாநாயகி மற்றும் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகளை தனித்தனி வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கவுள்ளார். அதிதி சங்கர் நடித்துள்ள 'விருமன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com