அதிதி ஷங்கரின் குரலில் வெளியான 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'காஜுமா' பாடல்

பிக் பாஸ் ராஜு நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' படம் ஜூலை 18ம் தேதி வெளியாகிறது.
அதிதி ஷங்கரின் குரலில் வெளியான 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'காஜுமா' பாடல்
Published on

சென்னை,

ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இதில் பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரெயின் ஆப் ஆரோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இதில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.

'பன் பட்டர் ஜாம்' படம் ஜூலை 18ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது 'காஜுமா' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அதிதி ஷங்கர் பாடியுள்ளார். பாடல் வரிகளை எம்.கே.பாலாஜி எழுதியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com