பள்ளியை தத்தெடுத்த வில்லன் நடிகர்

கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
பள்ளியை தத்தெடுத்த வில்லன் நடிகர்
Published on

தமிழில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சுதீப். புலி, முடிஞ்சா இவன புடி, பாகுபலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான சிவமோகாவில் ஒரு அரசு பள்ளியை சுதீப் தத்தெடுத்துள்ளார். இந்த பள்ளி 133 ஆண்டுகள் பழமையானது. பள்ளி சுவர்கள் பழுதடைந்து உள்ளன. மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சுதீப் செய்து கொடுக்க இருக்கிறார். கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறார். இதற்காக அவரை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com