36 வயதில் பிரபல ஆபாச பட நடிகை தற்கொலை

ஆபாச பட நடிகை காக்னி லின் கார்டரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
36 வயதில் பிரபல ஆபாச பட நடிகை தற்கொலை
Published on

வாஷிங்டன்,

ஆபாச படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை காக்னி லின் கார்டர். 36 வயதாகும் அவர் திடீரென தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

2005ம் ஆண்டுக்கு மேல் ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் சர்வதேச அளவில் பிரபலமாக தொடங்கினார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க தனக்கு ரொம்பவே பிடித்த நடனத்தை நாடியிருக்கிறார். 2019ம் ஆண்டு போல் டான்ஸராக ஒஹியோவில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் இணைந்து நடனம் ஆட ஆரம்பித்தவர் அதன் பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமுகப்பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கடந்த சில காலமாக மனநலப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.காக்னி லின் கார்ட்டரின் தற்கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com