25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் நடிக்கும் ஜோதிகா

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் நடிக்கும் ஜோதிகா
Published on

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த ஜோதிகா திருமணத்துக்கு பிறகு தனது கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இந்த நிலையில் ஜோதிகா தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அஜய்தேவ்கான், மாதவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜோதிகா கடைசியாக 1998-ல் வெளியான டோலி சாஜா கே ரக்னா என்ற இந்தி படத்தில் அக்ஷய் கன்னாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அஜய்தேவ்கான், மாதவன் படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தி திரையுலகுக்கு திரும்பி உள்ளார். திரில்லர் படமாக இது தயாராகிறது. இந்த படத்தை விகாஸ் பால் டைரக்டு செய்கிறார். இவர் குயின், சூப்பர் 30, குட்பை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். படப்பிடிப்பு மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com