9 ஆண்டுகளுக்கு பிறகு... பிருத்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப்?

கடந்த 2013-ம் ஆண்டு பிருத்விராஜ் நடித்த ’மெமரீஸ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜீத்து ஜோசப்.
After 9 years... Jeethu Joseph to direct Prithviraj's film?
Published on

சென்னை,

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஜீத்து ஜோசப். இவர் இயக்கிய 'திரிஷ்யம்' படம் இவரை பாலிவுட் வரை பிரபலமாக்கியது. சில மாதங்களுக்கு முன்பு பஷில் ஜோசப் இயக்கத்தில் 'நுணக்குழி' என்கிற திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.

இதை தொடர்ந்து மீண்டும் ஆசிப் அலி நடிப்பில் 'மிராகே'என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிருத்விராஜை வைத்து மீண்டும் ஒரு படத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு பிருத்விராஜ் நடித்த 'மெமரீஸ்' படம் மூலம் இயக்குனர் ஆனவர்தான் ஜீத்து ஜோசப். அதன்பிறகு 2016ல் மீண்டும் பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிருத்விராஜ் உடன் ஜீத்து ஜோசப் கூட்டணி சேர உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com