விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு...''சரியான வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன்'' - தமன்னா


After Break Up With Vijay Varma, Tamannaah Says She Is Trying To Become A Great Life Partner
x

சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முயற்சிப்பது குறித்த தமன்னாவின் கருத்து பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வாலம் வருபவர் தமன்னா. இவர், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் காதல் முறிந்தது.

இந்நிலையில், விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிப்பதாக தமன்னா பாட்டியா கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன். அதுதான் எனது இப்போதைய இலக்கு” ​​என்று தெரிவித்தார்.

சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க முயற்சிப்பது குறித்த தமன்னாவின் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது தமன்னா “டூ யூ வான்னா பார்ட்னர்” வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story