பிரபாசை தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் நடிக்கும் விஜய் தேவரகொண்டா?

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் 14-வது படத்திற்கான பூஜை நடைபெற்றது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது இவர் விடி 12 படத்தில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இவரது 14-வது படத்திற்கான பூஜை நடைபெற்றது. இப்படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக விடி 14 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப்பச்சனை படக்குழு அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அமிதாப்பச்சன் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாசுடன் நடித்திருந்தார். பிரபாசை தொடர்ந்து, அமிதாப்பச்சனுடன் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.