`சச்சின்'க்கு அடுத்து `தெறி'... ரசிகர்கள் `குஷி'


After Sachin, Theri... Fans are Kushi
x
தினத்தந்தி 21 April 2025 7:46 AM IST (Updated: 21 April 2025 5:09 PM IST)
t-max-icont-min-icon

சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2005-ம் ஆண்டு விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான 'சச்சின்' கடந்த 18-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுவரும்நிலையில், விஜய்யின் மற்றொரு படம் ரீ-ரிலீஸாக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

அதன்படி, விஜய், அட்லீ கூட்டணியில் தாணு தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரீ-ரிலீஸாகும் என்று தாணு தெரிவித்திருக்கிறார். இது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

1 More update

Next Story