தெலுங்கை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் மானசா வாரணாசி

'கப்புள் பிரண்ட்லி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நடிகை மானசா வாரணாசி.
தெலுங்கை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் மானசா வாரணாசி
Published on: 

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை மானசா வாரணாசி, விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி, கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்று கவனம் ஈர்த்தார். அழகிப் போட்டியில் கிடைத்த புகழைத் தொடர்ந்து, அவர் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

மிஸ் இந்தியாவில் இருந்து சினிமாவுக்கு!

திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு, மானசா வாரணாசி நிதித் தகவல் பகுப்பாய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் நடிப்பில் ஆர்வம் கொண்டு திரையுலகில் நுழைந்தார். 2024-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான 'தேவகி நந்தனா வாசுதேவா' மூலம் நடிகையாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான 'கப்புள் பிரண்ட்லி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட மானசா வாரணாசி, தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்த வாய்ப்புகளை எதிர்பார்த்து வருகிறார்.

தமிழில் நடிக்க ஆர்வம்

இதற்கிடையில், மானசா வாரணாசியைத் தமிழ் படங்களில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இரண்டு புதிய படங்களுக்கான கதைகளை அவர் கேட்டிருப்பதாகவும், அவற்றில் ஒரு கதையில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்து மானசா வாரணாசி கூறுகையில், “தென்னிந்திய சினிமாவில் நடிப்பது என்பது அலாதியானது. புதிய கதைகளைக் கேட்டு வருகிறேன். நிச்சயம் நல்ல தகவல்களைச் சொல்வேன்” என்றார்.

இதனால், விரைவில் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இயக்குநர் ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் சர்வானந்த் ஜோடியாக 'ஜார்ஜ் கிரிஷ்' என்ற படத்திலும் அவர் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com