தங்கலானை தொடர்ந்து சர்தார் 2விலும் ஆக்சன் காட்சியில் நடிக்கும் மாளவிகா மோகனன்

'சர்தார் 2' அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
After Thangalaan, Malavika Mohanan is also acting in Sardaar 2 in an action scene
Published on

சென்னை,

மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பிரபாசுடன் தி ராஜா சாப், கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சர்தார் 2 படப்பிடிப்பில் இருக்கும் மாளவிகா மோகனன், ஸ்டண்ட் காட்சியில் நடிக்க போவதாக ரோப்களை கட்டி இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளார்.

முன்னதாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த 'தங்கலான்' படத்தில் எருமை மாட்டின் மீதெல்லாம் ஏறி ஆரத்தியாக அதிரடியாக சிலம்பம் சண்டை போட்டு கெத்துக் காட்டினார் மாளவிகா மோகனன்.

தங்கலானை தொடர்ந்து, சர்தார் 2 படத்திலும் ஆக்சன் காட்சியில் நடிப்பதாக மாளவிகா மோகனன் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com