சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையல்ல.. திறமைதான் முக்கியம்- ஸ்ரேயா சரண்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஸ்ரேயா சரண், தனது அழகும் வளைவு நெளிவான நடனமும் மூலம் ரசிகர்களை நீண்ட காலமாக கவர்ந்து வருகிறார்.
சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையல்ல.. திறமைதான் முக்கியம்- ஸ்ரேயா சரண்
Published on

திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் சினிமாவில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஆடிய குத்தாட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து கவர்ச்சி நடனங்களிலும் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சியில் ஒருவர் “43 வயதிலும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த ஸ்ரேயா சரண், வயதை அடிப்படையாகக் கொண்டு நடிகைகளை மதிப்பிடுவது தவறு என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

“இப்படி கேட்பதே தவறு. வயது என்ன பிரச்சனை? திருமணம் ஆனவுடன் நடிகைகள் முடிந்துவிடுகிறார்கள் என்ற மனப்போக்கு தவறு. சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையல்ல; திறமைதான் முக்கியம். நல்ல கலைஞர்கள் எந்த வயதிலும் சாதிக்க முடியும்,” என்று அவர் தெளிவாக தெரிவித்தார். இந்த பதில், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com