“ஏஐ” தொழில்நுட்பம் மிகப்பெரிய பயத்தை தருகிறது - நடிகை கீர்த்தி சுரேஷ்


“ஏஐ” தொழில்நுட்பம் மிகப்பெரிய பயத்தை தருகிறது - நடிகை கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 20 Nov 2025 2:27 PM IST (Updated: 21 Nov 2025 10:11 AM IST)
t-max-icont-min-icon

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ம் தேதி வெளியாகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. சந்துரு ஏற்கனவே ‘சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். பின்னர் அவர், ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். “இப்போது இருக்கின்ற பெரிய பிரச்சனை ‘ஏஐ’. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய ‘ஏஐ’ படம் என்று.‘ஏஐ’எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய பயத்தை தருகிறது” என்றார்.

1 More update

Next Story