‘டிரெண்டிங் குயின்’ பட்டம் பெற்ற ஐஸ்வர்யா தத்தா

சினிமாவை தாண்டி, பேஷன் உலகிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
‘காபி வித் காதல்’, ‘கோழிப்பண்ணை’, ‘செல்லதுரை’, ‘மெட்ராஸ்காரன்’, ‘ஹிட்லர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் தமிழ் சீசன்–2 நிகழ்ச்சியின் மூலம் அவர் மேலும் பிரபலமானார்.
சினிமாவை தாண்டி, பேஷன் உலகிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வரும் ஐஸ்வர்யா தத்தா, சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
கடற்கரை பின்னணியில் ஸ்டைலிஷ் ரவிக்கையுடன் ஸ்லிட் ஸ்கர்ட் அணிந்து உற்சாகமாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பேஷன், பிசினஸ் மற்றும் தன்னம்பிக்கை ஆகிய மூன்றிலும் இளம்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருந்து வரும் ஐஸ்வர்யா தத்தா, சினிமா நடிப்பில் சிறிய இடைவெளி இருந்தாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிஸியாகவே இருந்து வருகிறார்.
இதன் காரணமாக, அவரது தற்போதைய தோற்றத்திற்கும் ஸ்டைலுக்கும் ரசிகர்கள் ‘டிரெண்டிங் குயின்’ என்ற பட்டத்தை வழங்கி வருகின்றனர்.






