சமூக வலைதளங்களில் இருந்து விலகிய ஐஸ்வர்யா லட்சுமி!


சமூக வலைதளங்களில் இருந்து விலகிய ஐஸ்வர்யா லட்சுமி!
x
தினத்தந்தி 13 Sept 2025 1:15 PM IST (Updated: 13 Sept 2025 1:15 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக பதிவிட்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் விஷாலின் "ஆக்சன்" படம் மூலம் அறிமுகமான இவர், 'ஜெகமே தந்திரம், 'பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2', கட்டா குஷ்தி, தக் லைப்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் கடைசியாக மாமன் படம் வெளியானது.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது சமூக வலைதளத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

அதில், "சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது, எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story