

சென்னை,
'தக் லைப்' படத்தைத் தொடர்ந்து, 'கட்டா குஸ்தி 2' படத்தின் ரிலீசுக்கு தயாராகி வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ராஷ்மிகா மந்தனா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ஜூலை 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷ்ணு விஷாலுடன் இணைந்து இதில் குஸ்தி வீராங்கனையாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலி போன்ற சிறிய கதாபாத்திரங்களை தேர்வு செய்வது ஏன் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா லட்சுமி, "கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பது முக்கியமல்ல. அந்த கதை திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம்.
எல்லாராலும் ராஷ்மிகா மந்தனாவாக முடியாது. முழுநீள கமர்ஷியல் கதாநாயகி கதாபாத்திரங்களை அவர் மிகவும் நளினமாக செய்கிறார். அந்த மாதிரி நடனமாடவோ, முழுமையான கமர்ஷியல் ஹீரோயினாகவோ என்னால் இருக்க முடியாது. அது மிகவும் கடினமான விஷயம்" என்று தெரிவித்தார்.